பறிபோகுமா ஹரின் மற்றும் மனுஷ நாணயக்காரவின் பதவிகள்? உயர் நீதிமன்றின் தீர்ப்பு விரைவில்

#SriLanka #Parliament #Court Order #Harin Fernando #Court
Mayoorikka
2 years ago
பறிபோகுமா ஹரின் மற்றும் மனுஷ நாணயக்காரவின் பதவிகள்? உயர் நீதிமன்றின் தீர்ப்பு விரைவில்

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை இரத்து செய்தமைக்கு எதிராக அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வாறான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 நியாயமான விசாரணையின்றி தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு கோரி ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

 இதேபோன்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமையை முஸ்லிம் காங்கிரஸ் இடைநிறுத்துவது சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்தது.

 அதன்படி, அவரது அமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவை பதவி இரண்டும் ஒரே நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

 இந்த மனு அந்த முன்மாதிரியுடன் விசாரணைக்கு வருவதால், அமைச்சர்கள் மனுஷ்ய நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ இருவரும் ஒரே ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4