மீண்டும் அதிகரிக்கப்படுமா மின் கட்டணம்?

#SriLanka #Electricity Bill
PriyaRam
2 years ago
மீண்டும் அதிகரிக்கப்படுமா மின் கட்டணம்?

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்த குறித்த அதிகாரி, பொதுப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி மக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 இம்மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களிடம் வாய்மூலம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரி, அதன் பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4