மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!

#SriLanka #Death #Police
PriyaRam
2 years ago
மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நாற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உதவி பரிசோதகர் சபேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சனிக்கிழமை வவுணதீவிலுள்ள தனது பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வவுணதீவு பகுதியில் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்தார்.

இதனையடுத்து அவரை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதுள்ளார்.

 அவரின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரின் இறுதிகிரிகை பொலிசாரின் மரியாதையுடன் நாளை இடம்பெறவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4