உலகின் பாரிய மாற்றங்களின்போது பெரும்பங்கினை ஆற்றுபவர்கள் இளைஞர்களே! அனுர

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #AnuraKumaraDissanayake
Mayoorikka
2 years ago
உலகின் பாரிய மாற்றங்களின்போது பெரும்பங்கினை ஆற்றுபவர்கள் இளைஞர்களே! அனுர

உலகின் பாரிய மாற்றங்களின்போது பெரும்பங்கினை ஆற்றுபவர்கள் இளைஞர்களே என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 சே தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவாறு கூறியுள்ளார், மேலும் கூறியதாவது,  உலகின் பாரிய மாற்றங்களின்போது பெரும்பங்கினை ஆற்றுபவர்கள் இளைஞர்களே.

images/content-image/1697030583.jpg

அன்று அந்தணர்களின் அழுத்தத்திற்கு எதிராக மானிட சமுதாயத்தின் நன்மை கருதி சித்தார்த்த குமாரன் சொந்த மனையிலிருந்து வெளியேறிச்செல்வது 29வது வயதிலாகும். 

இயேசு கிறிஸ்து தனது புகழ்பெற்ற "மலைப் பிரசங்கத்தை" 30 வது வயதிலேயே ஆற்றுகிறார். மார்க் சகர்பக் முகநூல் செயலியை 20 வது வயதிலேயே கண்டுபிடித்தார்.

images/content-image/1697030613.jpg

 கூகுளை நிர்மாணித்த சர்ஜி பிறின் மற்றும் லெறீ பேஜ் 25 வயதிலேயே அதனை சாதிக்கிறார்கள். "சே" 28 வது வயதிலேயே கியூபாவிற்குச் செல்கிறார். தோழர் "றோஹண" தனது 22 வயதிலேயே மக்கள் விடுதலை முன்னணியைக் கட்டியெழுப்புகிறார்.

 உலகின் மிகப்பெரிய திருப்புமுனைகளுக்கு பாரிய மாற்றங்களுக்கு உயிர்கொடுப்பது, பிள்ளையார்சுழி போடுவது யார்? இளைஞர் தலைமுறையினரே." 

images/content-image/1697030636.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4