கனடா-இந்திய விவகாரம் : இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இரகசிய சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சரும், ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான மெலனி ஜோலியும் (Melanie Joly) ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஒரு பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த சந்திப்பு ரகசியமாக நடைபெற்றதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ள நிலையில், கனேடிய வெளியுறவு அமைச்சகம் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இன்னமும் கனேடிய தூதரக அதிகாரிகள் சிலர் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்றுஅந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை இந்தியாவிலிருந்து திருப்பி அழைத்துக்கொள்ள, இந்தியா கனடாவுக்கு விதித்திருந்த கெடு, இம்மாதம், அதாவது, அக்டோபர் 10ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.



