தனியார் துறையினருக்கு திறந்த அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
தனியார் துறையினருக்கு திறந்த அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி!

தொழில்நுட்பம் மற்றும் பசுமையான பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தில் தீவிரமாக இணைந்து கொள்ளுமாறு தனியார் துறையினருக்கு திறந்த அழைப்பை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவ நிபுணத்துவ கண்காட்சியை இன்று (11.10) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 

தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் BPM வாரத்தை ஆரம்பித்து,  முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த கண்காட்சியானது இன்று (11.10) முதல் வரும்  13 ஆம் திகதிவரை  கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4