இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பிவைப்பது தற்காலிகமாக நிறுத்தம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பிவைப்பது தற்காலிகமாக நிறுத்தம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நிலவும் மோதல்களை கருத்தில் கொண்டு இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (11.10) தெரிவித்தார்.  

இதேவேளை, காஸா பகுதியில் 5 நாட்களாக இடம்பெற்று வரும் மோதலில் இரு தரப்பிலும் 2,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சர்வதேச போர்ச் சட்டத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக சுயாதீன அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இதற்கிடையில், காஸா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அஷ்கெலோன் நகரம், சனிக்கிழமையன்று ஹமாஸ் தாக்குதல்களால் அதிக சேதத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகுிறது.  

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய கிராமங்களை எவ்வாறு தாக்கினார்கள் என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதேவேளை இந்த தாக்குதலில் 40 குழந்தைகள் பலியாகி இருப்பதாகவும், 2 இலட்சத்து 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  அது மாத்திரம் இல்லாமல் பலர் பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4