பொது நிறுவனங்களின் அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
பொது நிறுவனங்களின் அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கையில் பொது நிறுவனங்களின் அமைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு மேலும் சிநேகபூர்வ சேவையை வழங்கும் நோக்கில் தொடர் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும் என திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார தெரிவித்தார்.

 இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிப்பதற்கு மக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்கள் பணியாற்றி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

 ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜகத் குமார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 மக்களுக்கு அதிக சேவைகளை வழங்கும் ஓய்வூதியத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், சுயாதீன ஆணைக்குழுக்கள், நிதி ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களுடன் இந்தக் குழு கலந்துரையாடியுள்ளதாகவும், பொறுப்புக்கூறலை சரியான முறையில் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் உறுப்பினர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4