பிரான்ஸ் கட்டாரிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்யவுள்ளது
பிரான்சுக்கு நீண்ட காலமாக 'gaz' இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதலிடம் வகித்து வந்தது.
ரஷ்யா, உக்ரைன் போரில் பிரான்ஸ் உக்ரைன் பக்க சார்பு நிலை எடுத்துள்ளதால் ரஷ்யா தனது இயற்கை எரிவாயு விநியோகத்தை, பிரான்சுக்கு எதிரான தந்திரோபாயமாக பாவித்து வருகிறது.
இந்த நிலையில் TotalEnergies நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தை கத்தாரில் இருந்து இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் எதிர்வரும் ஒக்டோபர் 27ம் திகதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின்படி 2026 முதல் கத்தாரில் இருந்து பிரான்சுக்கு 3.5 மில்லியன் தொன் எரிவாயுவினை 27 ஆண்டுகளுக்கு கத்தார் விநியோகம் செய்யும் என கூறப்படுகிறது. எரிசக்தி அமைச்சரும் கத்தார் எரிசக்தியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான Saad Sherida Al-Kaabi அவர்களும், TotalEnergies நிறுவனத்தின் பிரான்சுக்கான நிறைவேற்ற பணிப்பாளர் Patrick Pouyanné இதற்கான ஒப்பந்தத்தை Dohaவில் வைத்து கைச்சாத்திட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறக்குமதியால் இயற்கை எரிவாயுவின் விலை எதிர் காலத்தில் குறையும் என்றே கூறப்படுகிறது.