அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (12.10) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

திணைக்களத்தின் அறிவிப்பின்படி, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4