ஹமாஸ் அமைப்பை சுவிஸ் நாடு உட்பட பல நாடுகள் ஏன் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது?
முதலில் ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு எதிராக போரிடுவதை இவ்வுலகு ஏற்கிறது. அதேபோல சில தீவிரவாத அமைப்புக்கள் என்பது போரியல் வரம்புக்கு உட்பட்டு போரிடுவதையும் தீவிரவாதம் என பல நாடுகள் அவ்வமைப்புகளுக்கு நேரடியாகவோ மறை முகமாகவோ அவ்வமைப்பின் நியாயம், உண்மைத்தன்னையை வைத்து ஆதரிக்கின்றன.
போர் வரம்பை மீறி பெண்களை மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துவது. மக்களை பயணக் கைதிகளாக வைத்து மிரட்டி அவர்கள் விரும்பும் தேவையை பெறுவது. அத்தோடு தீவிரவாதச் செயலில் ஈடுபட்ட கைதிகளை விடுதலை செய்ய வைப்பது. போராட்டம் என்ற போர்வையில், ஆயுதம் மற்றும் போதை பொருட்களை மற்ற நாட்டுக்கு கடத்துவது போன்ற செயல்கள் செய்பவர்களை இவ்வுலகம் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியுள்ளது.
அவ்வகையில் ஹமாஸ் இயக்கம் சில விடயங்களில் போர் வரம்பை மீறியிருந்ததால் இவர்களையும் பல நாடுகள் பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்துகின்றனர். ஹமாசை பொறுத்தவரையில் கடைசியாக இஸ்ரேலுக்குள் நடந்த இசை நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகளை கடத்திச் சென்றதாலும் அவர்களில் பெண்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தியதாலும், இஸ்ரேல் தம் வேண்டுகோளுக்கு இணங்காவிட்டால் அனைவரையும் கொன்றுவிடப்போவதாக கூறியதால் உலகம் சற்று மேலே போய் கமாசை அதி தீவிரவாதிகள் என கூறுகிறது.
பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலால் பல கொடுமைக்குள்ளாக்கப்பட்டதையும் ஏற்கும் சில சுவிஸ் போன்ற நாடுகள். அவர்கள் ஒரு சிறிய நாடாக இருந்தாலும் வல்லரசுக்கு வல்லரசாக இருக்கும் அமெரிக்காவின் மூளையும் அவர்களின் பொருளாதாரமும் இஸ்ரேலாக இருப்பதால் அவை மூடி மறைக்கப்படுகிறது.
எது எதுவாக இருப்பினும் போரியல் வரைவிலக்கணத்துள் மக்களை பயணக் கைதிகளாக வைத்திருப்பது தவறு என்பதையும் கருத்தில்கொண்டு கமாசை பயங்கரவாதிகள் என உலகம் ஒதுக்குகிறது.
ஹமாசை பயங்கரவாதிகள் என கூறும் பல நாடுகள் இஸ்ரேல் பாலஸ்தீனருக்கு நடக்கும் கொடுமையையும் கண்டிப்பதாக தெரிகிறது.
இதுவே கமாஸ் இயக்கமாக இருந்தாலும் சரி போரியல் வரம்பை மீறும் செயல் செய்வோரை சுவிஸ் உட்பட அனைத்து நாடுகளும் பயங்கரவாதியாகவே முத்திரை குத்தி ஒதுக்கப்படுகின்றனர்.