பிரான்ஸிலிருந்து இஸ்ரேலுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட விமானம்

#Flight #France #Israel #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸிலிருந்து இஸ்ரேலுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட விமானம்

இஸ்ரேல் மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலின் பின்னர் இரு நாடுளிலும் போர் பதட்டம் நிலவிவருகிறது. 

இதுவரை 1200 இஸ்ரேலியரும், சம அளவில் பலஸ்தீனியரும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 18 பேர் காணாமல் போயுள்ளனர்.

 காணாமல் போனவர்கள், ஹமாஸ் அமைப்பால் கடந்த சனிக்கிழமை பயணக்கைதிகளாக இஸ்ரேலில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்களில் இவர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 இந்த நிலையில் இன்று காலை பரிசில் இருந்து Air France விமானம் ஒன்று இஸ்ரேல் நோக்கி விசேடமாக பறந்துள்ளது. குறித்த விமானத்தில், பிரான்ஸ் நாட்டவர்களில் வயதான நோயாளர்கள், கர்ப்பிணி பெண்கள், துணைகள் இல்லாத சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 381 பேர் அங்கிருந்து பாரிஸ் வரவுள்ளனர்.

images/content-image/1697124681.jpg

 இஸ்ரேலில் இருந்து மாலை 4:40க்கு புறப்பட்டும் விமானம் பாரிசுக்கு இரவு 8:45க்கு வந்தடையும். இந்த விசேட விமான சேவை நாளை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மீண்டும் இடம் பெறும் என வெளிவிவகார அமைச்சர் Catherine Colonna தெரிவித்துள்ளார்.

 இஸ்ரேலில் பிரான்ஸ் நாட்டவர் இரண்டு லட்சம் பேர் அங்கு நிரந்தரமாக வாழ்கிறார்கள். அனைவரும் பிரான்ஸ் திரும்ப மாட்டார்கள், ஆனால் பிரான்சில் இருந்து குறித்த தாக்குதலுக்கு முன் பல காரணங்களால் இஸ்ரேல் சென்ற பலரும், Air France விமான சேவைகள் இஸ்ரேல் பிரான்ஸ் சேவைகளை காலவரையற்று நிறுத்தி உள்ளதால் மீண்டும் பிரான்சுக்கு வரமுடியாமல் அங்கு தவித்து வருகின்றனர்.