இந்திய கோரிக்கைகளுக்கு கனடா செவி சாய்க்கவில்லை

இந்தியாவினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு கனடா அடிபணியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் கடமையில் ஈடுபட்டுள்ள ராஜதந்திரிகளை மீள அழைத்துக் கொள்ளுமாறு கனடாவிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்திருந்தது. தூதரகத்தில் பணியாற்றி வரும் மூன்றில் இரண்டு ராஜதந்திரிகளை இவ்வாறு நாட்டுக்குமீள அழைத்துக் அழைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கான கால கெடுவாக பத்தாம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கனடிய அரசாங்கம் அரசாங்கம் ராஜதந்திரிகளை மீள அழைத்துக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொழம்பிய மாகாணத்தில் சீக்கிய மதத் தலைவர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை தீவிரமடைந்துள்ளது.
சீக்கிய மதத் தலைவரை படுகொலை செய்ததன் பின்னணியில் இந்திய முகவர்கள் இருப்பதாக கனடா குற்றம் சுமத்தி இருந்தது இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் 41 ராஜதந்திரிகளை மீள அழைத்துக் கொள்ளுமாறு இந்தியா கோரியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



