சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது!

#SriLanka #Driver
PriyaRam
2 years ago
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள் தெரிவித்துள்ளது.\

அதன்படி, பராமரிப்புப் பணிகளை கருத்தில் கொண்டு அக்டோபர் 16, 17 ஆம் திகதிகளில் அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

எனவே, உரிய சேவையைப் பெற மேற்கூறிய திகதிகளில் அலுவலகத்திற்குச் செல்ல காத்திருந்தவர்களுக்கு அதற்கு பதிலாக, அவர்கள் விரும்பும் மற்றொரு திகதியில் அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்திற்குச் செல்லலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4