கனடாவைச் சேர்ந்த மூவர் இஸ்ரேலில் காணமற்போயுள்ளனர்

#Canada #Attack #Israel #Lanka4 #லங்கா4 #Missing #Canada Tamil News #Tamil News
கனடாவைச் சேர்ந்த மூவர் இஸ்ரேலில் காணமற்போயுள்ளனர்

இஸ்ரேலில் தங்கியிருந்த கனேடியர்கள் மூவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களில் கனடியர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

images/content-image/1697185053.jpg

 மேலும், மற்றுமொருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மூன்று கனேடியர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை எனவும், இவர்கள் ஹமாஸ் போராளிகளினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும், இஸ்ரேலிய படையினர் காஸா மீது மேற்காண்ட தாக்குதல்களில் கனடியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!