9 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!

#SriLanka #Colombo #Court
PriyaRam
2 years ago
9 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 9 ஈரானிய பிரஜைகளுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை செய்து கொண்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க செயற்படும் வகையில், ஒன்பது வெளிநாட்டு பிரஜைகளையும் ஈரானுக்கு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அக்குரலை கடற்பரப்பில் இழுவை படகில் சென்ற ஈரானிய பிரஜைகள் ஒன்பது பேர் இலங்கை கடற்படையினரால் பெருமளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4