இன்று சாவகச்சேரி-சங்கத்தானை வைரவசுவாமி கந்தசுவாமி கோவிலில் சுவிஸைச் சேர்ந்த ஆத்ம ஞானி ஸ்ரீ சத்குரு சுவாமிகளின் பஜனை நிகழ்வு (படங்கள் உள்ளே)

#SriLanka #Switzerland #Temple #swissnews #Lanka4 #சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #கோவில் #இலங்கை #லங்கா4 #programme
இன்று சாவகச்சேரி-சங்கத்தானை வைரவசுவாமி கந்தசுவாமி கோவிலில் சுவிஸைச் சேர்ந்த ஆத்ம ஞானி ஸ்ரீ சத்குரு சுவாமிகளின் பஜனை நிகழ்வு (படங்கள் உள்ளே)

இன்று 13-10-2023 வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தின் பேர்க்டோவ்வை சேர்ந்த ஆத்ம ஞானி ஸ்ரீ சத்குரு பூரண சுவாமிகளுடன் அவரின் குழுவினரும் சேர்ந்து பஜனை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி சாவகச்சேரி,சங்கத்தானை அருள்மிகு வைரவ சுவாமி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற இறையருளும் குருவருளும் கூடிவந்தது.

images/content-image/1697206075.jpg

இன்று பிற்பகல் 4.00 மணியளவில் கோவிலில் விசேட அபிஷேக ஆராதனையுடன் ஆரம்பமான இந்த பஜனை நிகழ்வில் முருகபக்தர்கள் சிறுவர் சிறுமியர் தொடக்கம் முதியவர்கள் வரை பக்திப் பரவசத்துடன் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையில் முதற்தர செய்தி ஊடகங்களில் ஒன்றான லங்கா4 ல் இச்செய்தி பிரசுரமாகும் வேளையில் பஜனை முடிவுற்று சிறப்பு பூஜை ஆரம்பமாகியிருந்தது. இந்த பூஜையைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்க பூரண ஆச்சிரமம் பேர்க்டோவ் சுவிஸிலிருந்து வருகை தந்துள்ள ஆத்ம ஞானி ஸ்ரீ சத்குரு பூரண சுவாமி அவர்களின் சொற்பொழிவும் இடம்பெறும்.

images/content-image/1697207002.jpg

images/content-image/1697207349.jpg

முருகப்பெருமானின் ஆசிகளையும் அருளையும் நாடி வருவோர்க்கு இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இராப்போசன விருந்தும் ஆலய பரிபாலன சபையினரால் வழங்கப்படவுள்ளது என்பதும் ஒரு விசேஷ அம்சமாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4