இஸ்ரேலிலிருந்து கனேடியர்களை ஏற்றிய விமானம் வந்தடையவுள்ளது

இஸ்ரேலில் இருந்து ஒரு தொகுதி கனடியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலில் நிர்க்கதியாகியுள்ள ஒரு தொகுதி கனடியர்களை மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலின் தெல் அவீவ் விமான நிலையத்தின் ஊடாக கனடியர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் 128 பயணிகளைக் கொண்ட ஒரு விமானமும் 153 பயணிகளைக் கொண்ட மற்றுமொரு விமானமும் இஸ்ரேலில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இவ்வாறு இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு ஏதேன்ஸை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அங்கிருந்து கனடாவிற்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
ராணுவ விமானங்கள் மூலம் இவர்கள் இஸ்ரேலில் இருந்து மீள அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 5685 கனடியர்கள் இஸ்ரேரில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், பலஸ்தீனத்தில் 465 பேர் தங்கி இருப்பதாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.
விசேட ராணுவ விமானங்கள் மூலம் கனடியர்கள் மீளவும் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



