வரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள்: 2 பில்லியன் ரூபாவை தயார் செய்யுமாறு அறிவித்த தேர்தல் ஆணைக்குழு

#SriLanka #Election #Election Commission
Prathees
2 years ago
வரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள்:  2 பில்லியன் ரூபாவை தயார் செய்யுமாறு  அறிவித்த தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பல வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால் , திடீரென தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டால், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை 2.2 பில்லியன் ரூபாவை அடிப்படை செலவுகளாக தயார் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் தகவல் அளித்துள்ளது.

 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 9 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் வாக்களிப்பு திகதி வரையில் 2.2 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 எஞ்சிய 6.8 பில்லியன் ரூபா தேர்தல் முடிந்து சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் தேவைப்படுவதாகவும் எரிபொருள், மின்சாரம் மற்றும் அச்சுப் பணிகள் உள்ளிட்ட பெறப்பட்ட சேவைகள் தொடர்பான கட்டணங்களைத் தீர்ப்பதற்காகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அண்மையில் பிரதமரும் பொது நிர்வாக அமைச்சருமான தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

 தேர்தலை நடத்துவதற்கு தேவையான பின்னணியை தயார் செய்யுமாறு ஆணைக்குழு கோரியுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமையினால், வேட்பாளராக களமிறங்கிய அரச ஊழியர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் ஆணைக்குழு பிரதமரிடம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4