உலக வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு அதிக பாதுகாப்பு!

#India #WorldCup
PriyaRam
1 year ago
உலக வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு அதிக பாதுகாப்பு!

இந்தியா – பாகிஸ்தான் மோதும் 2023 ICC கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கு அதிரடியாக 11,000 பொலிஸார் மற்றும் சிறப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அந்த போட்டிக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுவரை உலகிலேயே எந்த கிரிக்கெட் போட்டிக்கும் இப்படி ஒரு இமாலய பாதுகாப்பு கொடுக்கப்பட்டதில்லை. 

இதற்கு காரணமாக ஒரு மின்னஞ்சல் ஒன்றை சுட்டிக் காட்டுகிறார்கள் இந்திய காவல்துறையினர்.

முன்னதாக மும்பை காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நரேந்திர மோடி விளையாட்டரங்கை வெடி வைத்து தகர்ப்போம் எனவும், எங்களுக்கு 500 கோடி பணமும், சிறையில் இருக்கும் பெரிய தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய்-ஐ விடுவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த மின்னஞ்சல் ஐரோப்பா கண்டத்தில் இருந்து பிழையான வாக்கியங்களுடன் வந்திருந்தது.

இது உண்மையான மிரட்டல் அல்ல. ஒரு ஏமாற்று வேலையாக இருக்கலாம் என காவல்துறை அப்போதே கூறியது. 

எனினும், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கனடாவில் இயங்கும் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன், கிரிக்கெட் உலகக் கோப்பையை உலகப் பயங்கரவாதக் கோப்பையாக மாற்றுவோம் என்று மிரட்டி இருந்தார்.

இந்த மிரட்டல்களை தொடர்ந்து சுமார் 1 லட்சம் ரசிகர்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு வருவார்கள் என்பதால் தீவிர பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்படுள்ளது. 7,000-க்கும் மேற்பட்ட காவலர்களுடன், 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!