கனடாவின் நயாகரா பகுதியில் லொத்தர் சீட்டிழுப்பில் 42 ஆயிரம் டொலர் வெல்லப்பட்டுள்ளது

#Canada #Lanka4 #லொத்தர் #Lottery #லங்கா4 #வெற்றி #win #Canada Tamil News #Tamil News
கனடாவின் நயாகரா பகுதியில் லொத்தர் சீட்டிழுப்பில் 42 ஆயிரம் டொலர் வெல்லப்பட்டுள்ளது

கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியை அண்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டில் 42 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார்.

 32 வயதான வின்சன் பயாமொன்டி என்ற நபரே இவ்வாறு மாபெரும் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

 கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடர்ச்சியாக லொத்தர் சீட்டிலுப்புகளில் பங்கேற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நயாகரா பகுதிக்கு நயாகரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் லொத்தர் சீட்டு வென்று உள்ளதாக தமது தந்தை தம்மிடம் கூறியதாகவும் வெற்றி இலக்கங்களை பரீட்சித்த போது அந்த வெற்றியாளர் தாம் என்பது தெரிய வந்ததாக வின்சென்ட் தெரிவிக்கின்றார்.

 42 ஆயிரம் டாலர்கள் வெல்லப்பட்டுள்ளதாகவே முதலில் தாம் கருதியதாகவும் பின்னர் பூஜ்ஜியங்களை சரியாக எண்ணிய போது 42 மில்லியன் டாலர் பரிசு வென்றுள்ளமை தெரிய வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

images/content-image/1697282728.jpg

 இந்த வெற்றி குறித்து அறிந்து கொண்டதும் கை கால்கள் நடுங்க தொடங்கியதாகவும் மிகவும் அதிர்ச்சி அடைய நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 தனது சகோதரியை தொலைபேசியில் அழைத்து மீண்டும் இந்த வெற்றி இலக்கங்களை பரீட்சித்துப் பார்த்ததாகவும் அவர் தமது வெற்றியை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 தனது தந்தை, தங்கை, மைத்துனர் ஆகியோரை நன்றாக பார்த்துக் கொள்வதற்கும் தமது தொழில் முன்னேற்றத்திற்காகவும் இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த போவதாக வின்சென்ட் தெரிவிக்கின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4