பிரான்ஸில் களமிறக்கப்பட்ட 7000 இராணுவ வீரர்கள் : மக்ரோன் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு!
பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க பிரான்ஸ் 7,000 வீரர்களை திரட்டும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று (14.10) அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் உலகளாவிய பதட்டங்களின் சூழலில் பிரான்சை உலுக்கிய தாக்குதலுக்குப் பிறகு, சில பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்கள் வடக்கு நகரமான அராஸில் உள்ள கம்பெட்டா-கார்னோட் பள்ளிக்கு திரும்பினர்.
இந்த சம்பத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு அரசாங்கம் தேசிய அச்சுறுத்தல் எச்சரிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரும் திங்கட்கிழமை வரை 7000 பாதுகாப்பு படை வீரர்களை ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.