பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ஈரானுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் காஸா யுத்தத்தில், இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்த ஒரு விரிவாக்கத்துக்கும், நீடிப்புக்கும் எதிராக ஈரான் செயற்படக்கூடாது என ஜனாதிபதி மக்ரோன் அந்நாட்டு அரசை எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயற்படும் ஈரான், அப்படைக்கு ஆயுதங்களையும், இன்னபிற உதவிகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரான் ஜானாதிபதி Ebrahim Raïssi உடன் தொலைபேசியில் உரையாடிய மக்ரோன், ‘மோதலை அதிகரிக்கும் விதமாக செயற்படுவதை நிறுத்த வேண்டும்’ என தெரிவித்ததுடன், “பயங்கரவாத அமைப்பால் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் பிரெஞ்சு ஆண்களும் பெண்களும் அடங்குவர்.
அவர்களை மீட்பதே பிரான்சுக்கு முழுமையான முன்னுரிமையாகும்” எனவும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஈரானில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பிரெஞ்சு பிரஜைகளின் நிலைமை குறித்த தனது அக்கறையை மீண்டும் வலியுறுத்தியதுடன், அவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் மக்ரோன் கோரினார்.