லண்டனில் தேவி ஸ்ரீ பிரசாத் இன் (DSP) மிகப் பிரமாண்டமான இசை நிகழ்வு!
#London
#Music
#DSP
#MusicConcert
Mayoorikka
1 year ago
பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இன் (DSP) மிகப் பிரமாண்டமான இசை நிகழ்வு ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்வு 2024 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ளது. இந்த இசை நிகழ்விற்கான டிக்கெட்டுக்கள் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
இசை நிகழ்விற்கான டிக்கெட்டுக்களை இப்பொழுதிலிருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதேவேளை இந்த இசை நிகழ்ச்சியானது தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஐரோப்பாவில் நடைபெறும் முதல் இசை நிகழ்ச்சியாகும்.
இந்த இசை நிகழ்ச்சியில் அவரால் இசையமைக்கப்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களினை பாடிய பாடகர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.