'சலார்' திரைப்படத்தின் வைரலாகும் போஸ்டர்

#India #Cinema #Actress #Director #release #2023 #ImportantNews #Movie
Mani
2 years ago
'சலார்' திரைப்படத்தின் வைரலாகும் போஸ்டர்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சலார். 'பாகுபலி' படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற வேடத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சலார் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, நடிகர் பிரித்விராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு இவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4