கனடாவில் மானை வேட்டையாடியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

#Canada #அபராதம் #லங்கா4 #Canada Tamil News #Tamil News #Fined
கனடாவில் மானை வேட்டையாடியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

கனடாவில்,ஒன்றாரியோ மாகாணத்தில் மான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 சட்டவிரோதமான முறையில் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் மான் வேட்டையாடிய மூன்று பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

 வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்படாத வலயத்தில் குறித்த மூவரும் மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் ஒரு மானை துப்பாக்கியால் சுட்டு உள்ளதாக மாகாண இயற்கை வள அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

images/content-image/1697531404.jpg

 இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மூவருக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மொத்தமாக மூவருககும் பதினோராயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 மூன்று நபர்களும் குற்றச்செயலை ஒப்பு கொண்டதன் காரணமாக அவர்களின் குற்றச்செயல் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் முதலாம் சந்தேக நபருக்கு 5000, இரண்டாம் சந்தேக நபருக்கு 4000 மற்றும் மூன்றாம் சந்தேக நபருக்கு 2000 டொலர்கள் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!