பிரான்ஸ் தொலைக்காட்சி சேவையொன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல்
#France
#Lanka4
#லங்கா4
#Bomb
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
#Threat
Mugunthan Mugunthan
1 year ago
இன்று காலை ஏழு மணிக்கு "அல்லாஹ்வின் மகிமைக்காக இந்த செயலைச் செய்யப் போகிறேன் " என்னும் தலைப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று France 3 தொலைக்காட்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
செய்தி ஆசிரியர், பணியாளர்கள், கட்டிடத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் "அல்லாஹ்வின் மகிமைக்காக இந்த செயலைச் செய்யப் போகிறேன் " என்றும் அந்த மின்னஞ்சலில் எழுதப்பட்டுள்ளது.
குறித்த மின்னஞ்சலை அடுத்து France 3 சேவையின் Reims நகரில் உள்ள Hampagne-Ardenne தளம் முழுவதுமாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதேபோல் தூர இடங்களில் இருந்து பணிக்கு வருபவர்கள் அவர்களது வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு மின்னஞ்சல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.