கனடாவின் தொழில் அமைச்சினால் வழங்கப்படும் இலத்திரனியல் பயிற்சித்திட்டம்

#Canada #Job Vacancy #Lanka4 #technology #தொழில்நுட்பம் #தொழில் #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடாவின் தொழில் அமைச்சினால் வழங்கப்படும் இலத்திரனியல் பயிற்சித்திட்டம்

கனடாவின் தொழில் அமைச்சு, குடிவரவு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு(MLITSD) ஆகியவற்றுடன் இணைந்து ஸ்கப்ரோ ஹப் நிகழ்ச்சித் திட்டம் (CSI) முன்னெடுக்கப்படவுள்ளது.

 இலத்திரனியல் தொழிநுட்ப துறையில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்குத் தயாராகும் விதத்தில் அதிநவீன நடைமுறைப் பயிற்சியுடனான கல்வித்திட்டமாக இது காணப்படுகிறது.

 சிக்கலான இலத்திரனியல் பலகைகளை எவ்வாறு பொருத்துவது, பழுதை கண்டறிவது, சரி பார்ப்பது மற்றும் திருத்துவது பற்றிய அறிவை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

images/content-image/1697558005.jpg

 இந்நிகழ்ச்சி திட்டம் MLITSD இன் முக்கிய நோக்கமாக பின்வரும் விடயங்கள் காணப்படுகின்றன. 

  • அதனபடி, வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அதை எதிர்கொள்ளக்கூடிய பணியாளர்களை உருவாக்குதல்.

  •  வேலை தேடுபவர்களுக்கு பணி நுழைவுக்கான தடைகளை நீக்க வழிவகுத்தல்

  • அதிகரித்து வரும் தொழிலாளர் சந்தையின் தேவைகளை சந்திக்க வேலை வழங்குவோருடன் நேரடியாக இணைதல்.

 இதில் முக்கியமாக CIA வின் இந்த இலத்திரனியல் தொழில்நுட்பப் பயிற்சியானது முற்றிலும் இலவசமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இது 4 மாத பாடத்திட்டத்தினையும், அதி நவீன பயிற்சி கூட பயிற்சியினையும், வேலைவாய்ப்பு உதவியினையும் வழங்கவுள்ளதோடு சிறந்த சந்தர்ப்பமாகவும் இது கருதப்படுகிறது.

 மேலும் பயிற்சிநெறி தொடர்பான மேலதிக விபரங்கள் அனைத்தும் கீழுள்ள வலைதள முகவரியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

https://www.thecsi.com/skills-development-program.html



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!