பிரான்ஸ் ஓர்லி விமான நிலைய எயார் பிரான்ஸ் விமானச்சேவைகள் நிறுத்தப்படவுள்ளது
#France
#Airport
#Lanka4
#லங்கா4
#AirCraft
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எயார் பிரான்ஸ் விமான சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஆறு வழிச் சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.
பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Pointe-à-Pitre, Fort-de-France மற்றும் Saint-Denis de La Réunion ஆகிய நிலையங்களுக்காக சேவைகளும், பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் Toulouse, Marseille மற்றும் Nice ஆகிய விமான நிலையங்களுக்குமான சேவைகள் வரும் 2026 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்ட நிலையங்களுக்கான சேவைகள் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, Corse தீவுக்கான சேவைகள் ஓர்லி விமான நிலையத்தில் இருந்து எவ்வித தடையுமின்றி இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.