இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 6 கனேடியர்கள் கொல்லப்பட்டும், 2 பேர் காணாமல் போயுமுள்ளனர்
#Canada
#Israel
#Lanka4
#லங்கா4
#Missing
#Canada Tamil News
#Tamil News
#Hamas
Mugunthan Mugunthan
1 year ago

இஸ்ரேலில் உயிரிழந்த கனடியர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.
கனடிய வெளிவிவார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விபரத்தை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார். டிப்ரெட் லாபிடொட் என்ற கனடிய பெண்ணே தாக்குதல்களில் உயிரிழந்துள்ளார்.
இதன்படி இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்களில் ஆறு கனடியர்கள் உயிரிழந்தள்ளனர். மேலும், இரண்டு கனடியர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிலிருந்து ராணுவ விமானங்கள் ஊடாக சுமார் 1300 கனடியர்கள் நாட்டுக்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோதல் இடம்பெறும் வலயத்திலிருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ள முடியும் எனவும் வெளிவவிகார அமைச்சு அறிவித்துள்ளது.



