பிரான்ஸில் வெடிகுண்டு அச்சுறுத்தலால் விமான நிலையங்கள் மூடப்பட்டன
#France
#Airport
#Lanka4
#லங்கா4
#Bomb
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
#Threat
Mugunthan Mugunthan
1 year ago
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை நண்பகலின் பின்னர் இந்த பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
Toulouse, Nice, Nantes, Beauvais மற்றும் Lyon-Bron ஆகிய ஐந்து விமான நிலையங்கள் இன்று மூடப்பட்டன. வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சற்று முன்னர் கிடைத்த தகவலின் படி Strasbourg-Entzheim விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.