இஸ்ரேல் - பலஸ்தீனத்திற்கிடையில் சமாதானம் அசாத்தியம் - கனேடியர்கள்
#Canada
#Israel
#மக்கள்
#லங்கா4
#சமாதானம்
#Peace
#Palestine
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு இடையில் நிரந்தர சமாதானம் ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை என கனேடிய மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பான்மையான மக்கள் இரு நாடுகளுக்கு இடையில் சமாதானம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் கிடையாது என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் இணைய வழியில் இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து கனடியர்களை வெளியேற்றும் தீர்மானத்தை வரவேற்பதாக பெரும்பாலான கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.



