கனடா - இந்திய விவகாரம் : கனடாவிற்கு சாதகமான நிலையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா

#India #UnitedKingdom #Canada #United_States #Lanka4 #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடா  - இந்திய விவகாரம் : கனடாவிற்கு சாதகமான நிலையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா

இந்தியாவிலிருந்து கனடா மேலும் 41 தூதர்களை வெளியேற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து என்பன கனடாவின் செயலுக்கு வரவேற்பளித்துள்ளன.

 சீக்கியர் படுகொலை கனடாவில் காலிஸ்தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கனடா - இந்தியா இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இரு நாடுகளில் இருந்தும் பரஸ்பரம் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள தூதர்கள் இருப்பை குறைத்து கொள்ளும்படி இந்தியா வலியுறுத்தி இருந்தது.

 இந்தியாவின் இந்த வேண்டுகோளுக்கு ஏற்ப கனடா அரசும் தன்னுடைய தூதர்களில் 41 பேரை நேற்று திரும்ப பெற்றது. அதேவேளை காலிஸ்தானியர் படுகொலை விவகாரத்தில், மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்க தயக்கம் காட்டுகிறது. 

images/content-image/1697887639.jpg

எனினும் , இங்கிலாந்துடன் சேர்ந்து, கனடாவின் சீக்கியர் படுகொலை விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

 இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் இருந்து எண்ணற்ற கனடா தூதர்கள் வெளியேறுவது என்ற இந்திய அரசின் முடிவுகளுடன் நாங்கள் ஒத்து போகவில்லை என்று தெரிவித்து இருந்தது.

 ஆசியாவில் முக்கிய எதிரி நாடாக பார்க்கப்படும் சீனாவை எதிர்கொள்ள சரியான நாடு என்ற வகையில், இந்தியா உடனான உறவு பாதிக்கப்பட, அமெரிக்காவோ மற்றும் இங்கிலாந்தோ விரும்புவதில்லை. இந்நிலையில் கனடா விவகாரத்தில் இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!