விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு

#Cinema #Actor #TamilCinema #trailer
Mani
2 years ago
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய டிரைலர் வரும் 24ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4