இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, தற்போது மீண்டும் தொடக்கம்

#Cricket #WorldCup #sports #Breakingnews #Sports News
Mani
2 years ago
இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, தற்போது மீண்டும் தொடக்கம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது. எனினும், 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது, ​​மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​திடீரென கடும் பனிமூட்டம் மைதானத்தை சூழ்ந்ததால், போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டு ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது பனிமூட்டம் குறைந்துள்ள நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் ஷ்ரேயாஸ் 21 ரன்னிலும், கோலி 7 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4