பிரான்ஸ் வெர்சாய் மாளிகைக்கு வெடிகுண்டச்சுறுத்தல் விடுத்த நபருக்கு சிறைத்தண்டனை

#France #Lanka4 #லங்கா4 #Bomb #பிரான்ஸ் #France Tamil News #Tamil News #Threat #Palace
பிரான்ஸ் வெர்சாய் மாளிகைக்கு வெடிகுண்டச்சுறுத்தல் விடுத்த நபருக்கு சிறைத்தண்டனை

வெர்சாய் மாளிகைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஒக்டோபர் 23, திங்கட்கிழமை Versailles நகர குற்றவியல் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. 

வெர்சாய் மாளிகைக்கு கடந்த பத்து நாட்களில் எட்டு தடவை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தது. இதில் கடந்த வியாழக்கிழமை விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பில் 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

images/content-image/1698136146.jpg

 பின்னர் அவருக்கு இன்று திங்கட்கிழமை எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குறித்த நபர் தனது செயலுக்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!