பிரான்ஸ் பரிஸில் பல அகதிகள் காவற்துறையினரால் வெளியேற்றம்
#Police
#France
#Lanka4
#Refugee
#பொலிஸ்
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசித்த அகதிகள் பலர் இன்று காலை காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
சுகாதாரமற்ற முறையில் வசித்த 200 வரையான அகதிகளே வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக quais de Charente மற்றும் de Gironde பகுதியில் சிறிய கூடாரங்கள் அமைத்து அகதிகள் பலர் தங்கியிருந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் அங்கு வருகை தந்த காவல்துறையினர், அகதிகளை வெளியேற்றினர்.
அவர்கள் இல் து பிரான்சில் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வருடத்தில் இல் து பிரான்சுக்குள் இடம்பெறும் 30 ஆவது அகதிகள் வெளியேற்றம் இதுவாகும்.
இவ்வருடத்தில் இதுவரை 5,520 அகதிகள் இதுபோல் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.