கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் நிகழ்ந்த வாகன விபத்தில் மூவர் பலி

#Canada #Accident #Lanka4 #விபத்து #வாகனம் #vehicle #Canada Tamil News #Tamil News
கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் நிகழ்ந்த வாகன விபத்தில் மூவர் பலி

நோவா ஸ்கோட்டியா பிராந்தியத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 இந்த விபத்து சம்பவம் மாகாணத்தின் லோரன்ஸ் துறைமுக அதிவேக நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

 இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதான பெண் ஒருவரும், 26 வயதான ஆண் ஒருவரும் இரண்டு மாதங்களேயான சிசுவொன்றும் உயிரிழந்துள்ளனர்.

images/content-image/1698223647.jpg

 உயிரிழந்தவர்கள் பயணம் செய்த மற்றுமொரு 21 வயதான பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 மற்றைய வாகனத்தில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4