கனடாவில் மகளிர் உடற்பயிற்சி நிலையத்தினை ஆபாச காணொளியாக வெளியிட்ட நபருக்கு தண்டனை

#Arrest #Canada #Women #Sexual Abuse #Lanka4 #லங்கா4 #Gym #Canada Tamil News #Tamil News
கனடாவில் மகளிர் உடற்பயிற்சி நிலையத்தினை ஆபாச காணொளியாக வெளியிட்ட நபருக்கு தண்டனை

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஹமில்டன் பகுதியில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதை படமெடுத்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

 இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காணொளிகளை ஆபாச இணையதளம் ஒன்றில் குறித்த நபர் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த குற்ற செயலுடன் தொடர்புடைய நபருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாறியோ நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

images/content-image/1698233517.jpg

 மைக்கேல் மிக்கில் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 குயின்ஸ்டன் வீதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் குறித்த நபர் இவ்வாறு பெண்களை ஆபாசமாக காணொளியாக பதிவு செய்து அவற்றை பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!