ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ - ஆரம்பமானது தீவிர விசாரணை!

#SriLanka #Colombo #Police #Accident #Investigation
PriyaRam
2 years ago
ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ - ஆரம்பமானது தீவிர விசாரணை!

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதற்கமைய தீக்கிரையான வர்த்தக தொகுதியின் உரிமையாளர் மற்றும் அதன் அருகில் உள்ள, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று முற்பகல் 9.35 மணி அளவில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. 

images/content-image/2023/10/1698470853.jpg

இதனையடுத்து 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன்போது, 23 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4