நேரு உள்விளையாட்டு அரங்கில் 'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா! விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

#Cinema #Actor #TamilCinema #Vijay
Mani
2 years ago
நேரு உள்விளையாட்டு அரங்கில் 'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா! விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ', செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம், வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பிற நடிகர்கள் நடித்துள்ளனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் கடந்த வாரம் வெளியானது.

லியோ திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் வெற்றி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4