நுவரெலியாவில் அரச உத்தியோகத்தர்கள் போராட்டம்!

#SriLanka #Protest #NuwaraEliya #Workers
PriyaRam
2 years ago
நுவரெலியாவில் அரச உத்தியோகத்தர்கள் போராட்டம்!

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடாவிய ரீதியில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக நுவரெலியாவிலும் இன்று திங்கட்கிழமை நண்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/2023/10/1698655268.jpg

இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4