8ஆவது முறையாக பலோன் டி'ஓர் விருதை வென்ற மெஸ்சி
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் (Ballon d’Or) விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால் 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை ஆர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.
மெஸ்சி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் டி 'ஓர் விருதை வென்றிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார்.
தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை உலகக்கிண்ணத்தை ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதி வென்றிருந்தார்.
ஸ்பெயின் நாட்டுக்காக அவர் விளையாடி வருகிறார். ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணிக்கான விருதை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றது.