உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

#SriLanka #news #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY
Abi
3 weeks ago
உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான புதிய முயற்சியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக இசட்- புள்ளிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கே இவ்வாறு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் குறித்த மாணவர்கள் மதிப்புமிக்க சர்வதேச பல்கலைக்கழகங்களில் தங்கள் விருப்பப்படி பட்டப்படிப்புகளைப் தொடர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்காக மொத்தம் 200 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

அந்தவகையில், புலமைப்பரிசில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 32 மாணவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!