கனடாவின் டொரென்டோவில் மாணவியுடன் தகாத விதத்தில் நடந்த ஆசிரியருக்கு தண்டனை
#Student
#Canada
#Lanka4
#லங்கா4
#Teacher
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
ரொறன்ரோவில் மாணவியுடன் தகாத விதத்தில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவரை வீட்டுக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை பள்ளியொன்றின் ஆசிரியரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் அளவில் இந்த ஆசிரியர் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொலின் ரம்சேய் என்ற ஆசிரியரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

மாணவியுடன் ஆசிரியர் மிக நெருக்கமான தொடர்பு பேணியதாகவும், சிறுவர் துஸ்பிரயோக குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைகளின் போது குறித்த ஆசிரியர் குற்றச் செயலில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியருக்கு நீதிமன்றம் வீட்டுக் காவல் தண்டனை விதித்துள்ளது.