எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான்! - சுப்மன் கில் பேட்டி

#Meeting #India Cricket #Cricket #sports #2023 #Import #Player #Sports News
Mani
1 year ago
எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான்! - சுப்மன் கில் பேட்டி

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தான் வளரும் போது தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரராக இருந்தது யார் என்ற கேள்விக்கு எதிர்பார்க்காத பதில் ஒன்றை கூறினார். அதில் ஒரு சூட்சுமம் இருப்பதாக சில ரசிகர்கள் கூறுகின்றனர்.

தனக்கு பிடித்த வீரராக கடந்த பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா பெயர்களில் ஒன்றை சுப்மன் கில் கூறுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் சச்சின் டெண்டுல்கர் பெயரை கூறி இருக்கிறார்.

இதில் தான் சூட்சுமம் இருப்பதாக ரசிகர்கள் கண்ணடிக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் - சுப்மன் கில் இருவரும் நல்ல நட்பில் இருப்பதாக கூறப்படுகிறது. சிலர் இருவரும் காதலிப்பதாகவும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சுப்மன் கில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் உங்கள் சிறு வயதில் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்ட போது, எனது ஆதர்ச கிரிக்கெட் வீரர் சச்சின் தான் எனக் கூறினார்.

இதை வைத்து தான் ரசிகர்கள் சுப்மன் கில் மனதில் வேறு எதையோ வைத்து சச்சின் டெண்டுல்கர் பெயரை கூறி இருக்கிறார் என கிண்டல் செய்து வருகின்றனர். அதே சமயம் தற்போது ஆடும் வீரர்களில் தனக்கு விராட் கோலியை தான் பிடிக்கும் என கூறி இருக்கிறார் சுப்மன் கில்.

தற்போது கிரிக்கெட் ஆடும் இளம் வீரர்களில் சுப்மன் கில் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் முதல் இடத்தை சமீபத்தில் பிடித்தார். 38 இன்னிங்க்ஸ்களில் 2000 ஒருநாள் போட்டி ரன்களை குவித்து முந்தைய சாதனைகளை முறியடித்தார் சுப்மன் கில். முன்னதாக தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லா விரைவாக 2000 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்த வீரராக இருந்தார். அவர் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!