World Cup - இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்து வீசும் இலங்கை

#India #SriLanka #Cricket #WorldCup #sports #ICC #Toss
Prasu
2 years ago
World Cup - இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்து வீசும் இலங்கை

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இறுதியாக 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் வங்கடே மைதானத்தில் சந்தித்தன.

இந்நிலையில் இந்த உலகக் கிண்ண தொடரில் இதுவரை ஒரு போட்டியிலேனும் தோற்காத ஒரே அணியாக இந்திய அணி, இன்று இலங்கை அணிக்கு எதிராக களம் இறங்குகிறது. 

அதேநேரம் இலங்கை அணி இதுவரை விளையாடிய 06 போட்டிகளில் 02 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

 இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4