மலையக தமிழர்களுக்காக 14 மில்லியன் ரூபா இந்தியாவிடமிருந்து: எதிர்காலத்தில் 3000 மில்லியன் கிடைக்கும்

#India #SriLanka #money #Finance #JeevanThondaman
Mayoorikka
2 years ago
மலையக தமிழர்களுக்காக 14 மில்லியன் ரூபா இந்தியாவிடமிருந்து: எதிர்காலத்தில்   3000 மில்லியன் கிடைக்கும்

நமக்கிடையிலான பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் ஒதுக்கி அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூகத்தை முன்னேற்ற முன்வர வேண்டும். இந்த மாற்றத்தை எனது வாழ்நாளில் கொண்டுவருவேன் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்தார்.

 மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று வியாழக்கிழமை (02) நடைபெற்ற நாம் 200 நிகழ்விலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு குறிப்பிட்டார்.

 இந்நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டிருந்தார். 

 நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறுகையில், எதற்காக இந்த நிகழ்வு? எதற்காக இந்த அங்கீகாரம் என நிறையப் பேர் வினவுகிறார்கள்.

images/content-image/2023/11/1698972517.jpg

 காடுகளை தோட்டங்களாக மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் கொடுப்பதற்குப் பங்களித்த மக்களை நாம் இன்று அங்கீகரிக்கின்றோம்.

 இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளில் 30 வீதமானவர்கள் மாத்திரம் தான் கல்வி கற்கின்றனர். வெறும் 40 சதவீதத்தினருக்குத் தான் சுகாதாரம் கிடைக்கிறது. 

இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசியல் ரீதியான தீர்மானங்களை விட உண்மையான மாற்றங்கள் அவசியம். அந்த மாற்றத்தைக் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரிய பங்களிப்பை செய்கிறார். அவரால் 2013 இல் இருந்து இன்று வரை 14 ஆயிரம் வீட்டுத் திட்டம் கிடைத்தது.

 இந்திய அரசின் ஊடாக வேறு வேலைத்திட்டங்களும் கிடைத்தன. நாம் ஒன்றும் தாழ்ந்தவர்கள் கிடையாது. இன்று ஒரு இலட்சத்து முப்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே உள்ளனர்.

 மலையகத் தமிழர்களின் முழுமையான தொகை 13 இலட்சமாக உள்ளது. இருப்பினும் மேற்படி எண்ணிக்கையிலான தொழிலாளர்களே 13 இலட்சம் பேருடைய அடையாளமாக விளங்குகின்றனர். 

 எமது சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகின்றனர். 200 வருடங்கள் நாம் கஷ்டப்பட்டுளோம். மலையக சமூகத்தை வைத்து வாக்கு வேட்டை தான் செய்துள்ளார்களே தவிர இந்த சமூகத்திற்கு மாற்றத்தைக் கொண்டுவர சரியான திட்டம் யாரும் கொண்டுவரவில்லை. 

நமது அமைச்சின் ஊடாக வழமையாக 3000 மில்லியன் கிடைக்கும் இம்முறை 14 மில்லியன் கிடைத்துள்ளது. 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறோம். நமக்கிடையிலான பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் ஒதுக்கி அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூகத்தை முன்னேற்ற முன்வர வேண்டும். 

இந்த மாற்றத்தை எனது வாழ்நாளில் கொண்டுவருவேன் என்று உறுதியளித்தார். 

 நாம் 200 நிகழ்வில், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4