இலங்கையில் மழையுடனான வானிலை இன்று அதிகரிக்கும்!

#weather #Rain
Mayoorikka
2 years ago
இலங்கையில்  மழையுடனான வானிலை இன்று  அதிகரிக்கும்!

நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

 வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

 மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

 திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 25 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

 ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4