இலங்கையில் அழகான இடத்தில் உருவாகின்றது சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம்!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #University
Mayoorikka
2 years ago
இலங்கையில் அழகான இடத்தில் உருவாகின்றது  சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம்!

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலே 600 ஏக்கர் காணி ஏற்கனவே சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 காலநிலை மாற்றம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு எதிராக இலங்கை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 அரலிகஹா மன்றில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாற்ற மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த ஆண்டு காலநிலை செழிப்பு திட்டத்தை தான் முன்வைத்ததாகவும், இந்த ஆண்டு COP 28 இல் நிகர பூஜ்ஜிய உமிழ்வு திட்டத்தை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4